செய்திகள்
கோப்புபடம்

கரூர் அருகே தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-23 13:55 GMT   |   Update On 2020-11-23 13:55 GMT
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:

கரூர் சி.ஐ.டி.யூ,, ஏ.ஐ.டி.யூ.சி., எல்.பி.எப். உள்ளிட்ட கூட்டு குழுசங்கங்கள் சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கை விட வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கை விடவேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும், 240 நாள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 26-ந்தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதனை விளக்கும் வகையில், கரூர் அரசு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு விளக்க கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் செல்வராஜ், தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மண்டல துணை தலைவர் பாலசுப்பிரமணி, எல்.பி.எப். தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கரூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி காந்திகிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்குஏ.ஐ.டி.யூ.சி வடிவேலன் தலைமை தாங்கினார்.ஏ.ஐ.சி.சி.டி.யூ. பால்ராஜ், சி.ஐ.டி.யூ. முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

Similar News