கோவாவில் இருந்து சேலத்துக்கு வேனில் மது கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 390 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சேலத்துக்கு வேனில் மது கடத்தி வந்தவர் கைது - 390 பாட்டில்கள் பறிமுதல்
பதிவு: நவம்பர் 21, 2020 14:07
கோப்புபடம்
சேலம்:
கோவாவில் இருந்து சேலத்துக்கு மதுபானம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று காலை சூரமங்கலம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி, வேனை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கன்னங்குறிச்சியை சேர்ந்த சதீஷ் (வயது 45) என்பதும், கோவாவில் இருந்து சேலத்துக்கு வேனில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 390 மது பாட்டில்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.