செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் தொடங்கியது

Published On 2020-11-20 11:39 GMT   |   Update On 2020-11-20 11:39 GMT
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடங்கியது.
திருச்செந்தூர்:

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான இன்று தொடங்கியது. மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.  

வழக்கமாக சூரசம்ஹாரத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கடற்கரையில் குவிவார்கள். கொரோனா அச்சம் காரணமாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெறுவது இதுவே முதல் முறை.
Tags:    

Similar News