செய்திகள்
மாசிலா அருவி

கொல்லிமலை மாசிலா அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Published On 2020-11-16 03:50 GMT   |   Update On 2020-11-16 03:50 GMT
மழை பெய்து வருவதால் அங்குள்ள மாசிலா அருவியில் தற்போது தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அருவியை கண்டு மகிழ்ந்து அதில் ஆனந்தமாக குளித்து விட்டு செல்கின்றனர்.
சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கடந்த 7 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கொல்லிமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் கொல்லிமலைக்கு செல்ல அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து இ-பாஸ் கொண்டு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அதேபோல அரியூர் நாடு ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் அங்குள்ள மாசிலா அருவியில் தற்போது தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அருவியை கண்டு மகிழ்ந்து அதில் ஆனந்தமாக குளித்து விட்டு செல்வதை காணமுடிந்தது.
Tags:    

Similar News