செய்திகள்
கோப்புபடம்

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-10 10:20 GMT   |   Update On 2020-11-10 10:20 GMT
ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு கூடுதல் தொட்டி இயக்குவதற்கான மாதாந்திர சிறப்பு ஊதியம் நிலுவையுடன் வழங்க வேண்டும், 2013-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவையுடன் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பணிக்கொடை ரூ.50 ஆயிரம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் கடந்த 2017 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, உள்ளாட்சி மாவட்ட செயலாளர் அய்யாத்துரை, துணைத்தலைவர் கணேசமூர்த்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலாடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சிவனு பூவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் கடலாடி வட்ட கிளை தலைவர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வட்ட கிளை நிர்வாகி ஆனந்தநாதன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News