செய்திகள்
கைது

ரேஷன் அரிசி பதுக்கல் வழக்கில் புரோக்கர் கைது

Published On 2020-10-23 08:17 GMT   |   Update On 2020-10-23 08:17 GMT
நாகர்கோவிலில் ரேஷன் அரிசி பதுக்கல் வழக்கில் புரோக்கர் கைது செய்யப்பட்டார். ரேஷன் கடை ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், மருது ஆகியோர் இணைந்து கடந்த 2 நாட்களுக்கு முன் நடத்திய சோதனையில் நாகர்கோவில் கோட்டார் சக்திநகர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 47), கோட்டார் பரதர் தெருவை சேர்ந்த மாரிமுத்து (39) ஆகியோர் கேரளாவுக்கு கடத்துவதற்காக 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவற்றில் சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள 40 மூட்டைகள் ரேஷன் கடைகளில் இருந்து இவர்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் 4 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து அய்யப்பன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் புரோக்கராக செயல்பட்ட சுசீந்திரம் அருகில் உள்ள ஆஸ்ராமம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (39) என்பவரை நேற்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரேஷன் கடை ஊழியர் பிரதாப்சிங் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News