செய்திகள்
பணியிடை நீக்கம்

நாச்சியார் கோவில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

Published On 2020-10-22 01:58 GMT   |   Update On 2020-10-22 01:58 GMT
இரட்டை கொலை வழக்கை முறையாக விசாரிக்காத நாச்சியார் கோவில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் அருகே வக்கீல் காமராஜ், தனது நண்பர் சக்திவேலுடன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்துள்ளது.

இந்த வழக்கை நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி விசாரணை நடத்தி கொலை தொடர்பாக காமராஜின் உறவினர்கள் 4 பேரை கைது செய்தார்.

இந்த கொலை நடப்பதற்கு முன்பு கடந்த 10-ந் தேதி காமராஜுக்கும், அவருடைய உறவினர்களுக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் சரியாக நடவடிக்கை எடுக்காததால், இந்த கொலை நடந்துள்ளதாக கருதி நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News