செய்திகள்
மரவள்ளி கிழங்கு

உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி

Published On 2020-10-20 10:05 GMT   |   Update On 2020-10-20 10:05 GMT
மரவள்ளிக்கிழங்கிற்கு தமிழக அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம் நொய்யல், ஓலப்பாளையம், ஓரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன்புதூர், புன்னம், குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், பசுபதிபாளையம், குட்டக்கடை, பழமாபுரம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் 10 மாதங்களில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை மில்லுக்கு ஏஜெண்டுகள் மூலம் டன் ஒன்றுக்கு உரிய தொகைக்கு வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை ஒரு டன் ரூ.7500-க்கு விற்பனையானது. சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ. 8500-க்கு வாங்கி சென்றனர். இந்நிலையில் இந்த வாரம் சவ்வரிசி தயாரிப்பவர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கை ரூ 6,500-க்கும், சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கை ரூ.7,500-க்கும் வாங்கிச்சென்றனர்.

தொடர் மழை காரணமாக விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக அதிக அளவில் மரவள்ளிக்கிழங்குகள் கிடைப்பதால் விலையை குறைத்து வியாபாரிகள் வாங்கிச் செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மரவள்ளிக்கிழங்கிற்கு தமிழக அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News