செய்திகள்
போராட்டம்

மோகனூரில் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்

Published On 2020-10-17 07:54 GMT   |   Update On 2020-10-17 07:54 GMT
மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
மோகனூர்:

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் நேற்று மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் தீர்மானங்களை வாசித்தார். பொருளாளர் கோமதி, துணைச்செயலாளர் தமிழரசு, துணைத்தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சி கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை திரும்ப பெறவேண்டும். ஊராட்சி நிர்வாகங்களில் பெண் பிரதிநிதிகளுக்கு பதில், அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News