செய்திகள்
திருநங்கைகள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-09 07:23 GMT   |   Update On 2020-10-09 07:23 GMT
போலீசார் தாக்கியதை கண்டித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் முத்தமிழ்நகரை சேர்ந்தவர் திருநங்கை சமந்தா. இவர், அகில இந்திய மக்கள் வளர்ச்சி கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய மக்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான திருநங்கைகள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து பங்கேற்றனர். அப்போது திருநங்கை சமந்தா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் திருநங்கையை தாக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர். 

இதையடுத்து கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News