செய்திகள்
ராமேசுவரம் அருகே ஒத்ததாளை கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கி கிடந்த சுமார் 2 டன் எடை கொண்ட மிதவையை படத்தில் காணலாம

தனுஷ்கோடி கடலில் ஒதுங்கிய ராட்சத மிதவை

Published On 2020-09-30 01:33 GMT   |   Update On 2020-09-30 01:33 GMT
தனுஷ்கோடி கடலில் ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி ஒத்ததாளை கடற்கரையில் பெரிய உருளை ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கே கரை ஒதுங்கி கிடந்த உருளையை பார்வையிட்டபோது அது கடலில் மிதக்க விடக்கூடிய மிதவை என்பதும், ரப்பரால் செய்யப்பட்டது என்பதும், 2 டன் எடை கொண்டதும் எனவும் தெரியவந்தது.

இந்த மிதவையானது, பெரிய கப்பல்களை துறைமுக பகுதியில் நிறுத்தும்போது கப்பலின் ஓரப்பகுதி அலையின் வேகத்தால் சேதம் அடையாமல் இருக்க போடப்பட்டு இருக்கும். மேலும் கடல் வழிப்பாதையை அடையாளம் காட்டுவதற்கும் இந்த மிதவை பயன்படுத்தபடும் என்று கடலோர போலீசார் தெரிவித்தனர்.

இந்த ராட்சத மிதவையானது தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியிலிருந்து இழுத்து வரப்பட்டதா அல்லது ஆழ்கடல் பகுதியில் இருந்து அலையில் இழுத்து வரப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News