செய்திகள்
வீடியோ செய்தி

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை உள்பட முக்கியச் செய்திகள் வீடியோ தொகுப்பாக...

Published On 2020-09-29 16:27 GMT   |   Update On 2020-09-29 16:27 GMT
தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை, தினந்தோறும் 2ஜி வழக்கில் விசாரணை உள்பட முக்கியச் செய்திகள் வீடியோ தொகுப்பாக...
தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பது எப்போது?- முதலமைச்சர் விளக்கம்

பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை

அக்டோபர் 7 முதல் மீண்டும் சென்னை புறநகர் மினசார ரெயில் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கோமுகி நதி அணையிலிருந்து வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி நதி அணையிலிருந்து 1.10.2020 முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் பலி

தமிழகத்தில் இனறு புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தொடங்க ஒப்பந்தம்: முதல்வர் தகவல்

கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க MOU கையெழுத்தாகியுள்ளன என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீன்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுயுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கின்றனர்- பிரதமர் மோடி தாக்கு

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை சாடியுள்ளார்.

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் சம்மதம்: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதலை மீறினால் ரூ.8.60 லட்சம் அபராதம்

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை மீறினால் 1000 யூரோ அபராதமாக விதிக்கப்படும் என்றும், அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 யூரோ (இந்திய மதிப்பு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதன்முறையாக சூப்பர் ஓவரில் தோற்றுப்போன பும்ரா

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூப்பர் ஓவரை வீசிய யார்க்கர் புகழ் பும்ரா, முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். 2017 குஜராத் லயன்ஸ் அணக்கெதிராகவும், கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் சிறப்பாக பந்து வீசி மும்பையை வெற்றி பெற வைத்தார்.

பிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் மாதவன்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் மாதவன், அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம்.
Tags:    

Similar News