செய்திகள்
போராட்டம்

35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

Published On 2020-09-23 13:59 GMT   |   Update On 2020-09-23 13:59 GMT
35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
திருவாரூர்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத கால ஊதிய நிலுவை தொகை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலக ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட அனைத்து துறை அலுவலகங்களும் அலுவலர்கள், ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியது. பல்வேறு தேவைக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் தங்களது பணிகளை முடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு நாள் விடுப்பு போராட்டத்தினால் அரசின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News