செய்திகள்
கோப்புபடம்

கும்பகோணம் உழவர் சந்தையில் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் - நோய் தொற்று பரவ வாய்ப்பு

Published On 2020-09-23 09:14 GMT   |   Update On 2020-09-23 09:14 GMT
கும்பகோணம் உழவர் சந்தையில் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்யும் வியாபாரிகளால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
கும்பகோணம்:

கும்பகோணம் பழைய பஸ்நிலையம் அருகே உழவர்சந்தை உள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த உழவர் சந்தையில் கும்பகோணம், மாங்குடி, திருவலஞ்சுழி, தியாக சமுத்திரம், நரசிங்கபுரம், தாவரங்குடி, திருபுறம்பியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உழவர்கள் வந்து தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்கள். சிலர் வெளியே காய்கறிகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறார்கள். கும்பகோணம் உழவர்சந்தைக்குள் மொத்தம் 101 கடைகள் உள்ளன. இதில் தற்போது 34 கடைகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. இந்த உழவர்சந்தைக்கு கும்ப கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.

தற்போது கொரோனா தொற்று அதிக அளவில் பரவிவரும் வேலையில் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களின் வசதிக்காக வாசலில் கிருமிநாசினி மருந்து வைக்கப் பட்டுள்ளது. ஆனால், உழவர் சந்தையில் காய் கறிகளை விற்பவர்களில் சிலர் முக கவசம் அணியாமல் விற்பனை செய்து வருகின்ற னர். இதனால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வியாபாரிகள் முக கவசம் அணிந்து வியாபாரம் செய்ய அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News