செய்திகள்
கோப்புபடம்

கொரோனா காலத்தில் பணிநீக்கம்: நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்ட பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

Published On 2020-09-17 14:03 GMT   |   Update On 2020-09-17 14:03 GMT
கொரோனா காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

தமிழகத்தில் வேளாண் துறையின்கீழ் இயங்கும் நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்பட்டுவரும் பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிபகுதி மேலாண்மை திட்டம் ஆகியவற்றில் 273 நீர்வடிபகுதி அணி உறுப்பினர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 18 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 31-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள இந்த நீர்வடி பகுதி மேம்பாட்டு திட்ட பணியாளர்களை தமிழக அரசு திடீரென்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று நீர்வடி பகுதி அணி உறுப்பினர்கள் திரளாக வந்து ராமநாதபுரம் கலெக்டரை சந்தித்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலைகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த நிலையில் கொரோனா காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
Tags:    

Similar News