செய்திகள்
கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

குடிசை மாற்று வாரியம் அமைக்க இடம் தேர்வு- கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு

Published On 2020-08-19 09:13 GMT   |   Update On 2020-08-19 09:13 GMT
கடையநல்லூர் அருகே குடிசை மாற்று வாரியம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேரில் ஆய்வு செய்தார்.
அச்சன்புதூர்:

கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் சமத்துவபுரம் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மாவட்ட போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும், அதற்கான வரைபடத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து கடையநல்லூர் வடக்கு அய்யாபுரம் தெருவில் நடைபெறும் மருத்துவ முகாமை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது துணை கலெக்டர் கோகிலா, கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் குமார் சிங், வருவாய் ஆய்வாளர் முருகன், சுகாதார அலுவலர் நாராயணன், நகரமைப்பு அலுவலர் காஜா மைதீன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் அப்துல், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மகேஸ்வரி, தமிழ்ச்செல்வி, நகராட்சி உதவி செயற்பொறியாளர் முரளி, சுகாதார ஆய்வாளர் மாரிசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News