செய்திகள்
பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி

திருவாரூர் அருகே பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-22 12:58 GMT   |   Update On 2020-07-22 12:58 GMT
பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:

பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்த்தி தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் லியாகத்உசேன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், மாற்றத்திற்கான மக்கள் களம் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், மே-17 இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பெரியார் சிலையை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நபிகள் நாயகத்தை இழிப்படுத்தியவர்களை உடன் கைது செய்ய வேண்டும். மகளிர் குழுக்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு அலுவலகத்தை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News