செய்திகள்
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்தால் தடுப்பு சுவர் சேதம்

Published On 2020-07-19 08:51 GMT   |   Update On 2020-07-19 08:51 GMT
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தால் சரிந்து சேதமாகி கிடக்கும் தடுப்புசுவர் கற்களை சரி செய்வதோடு சாலையின் பாதுகாப்பு கருதி தடுப்பு சுவரையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள கடல் பகுதியாகும். இந்தநிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வழக்கத்தை காட்டிலும் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. அதிலும் அரிச்சல்முனை அருகே உள்ள கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாகவே உள்ளதுடன் கடல் அலையானது தடுப்பு சுவரின் கற்கள் மீது மோதி சாலை வரையிலும் கடல் நீர் வந்து செல்கின்றன. அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை காட்டிலும் கடல் சீற்றம், நீரோட்ட வேகத்தால் கம்பிப்பாடு அரிச்சல்முனை இடைப்பட்ட சாலையின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரின் கற்கள் சரிந்து கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பல இடங்களிலும் சிதறி போய் கிடக்கின்றன. தொடர்ந்து இதே நிலை இருக்கும் பட்சத்தில் தடுப்பு சுவர் முழுமையாக சரிந்து விரைவில் சாலையும் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தால் சரிந்து சேதமாகி கிடக்கும் தடுப்புசுவர் கற்களை சரி செய்வதோடு சாலையின் பாதுகாப்பு கருதி தடுப்பு சுவரையும் பலப்படுத்தவும், சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News