செய்திகள்
கலியமூர்த்தி

தஞ்சை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்

Published On 2020-07-15 08:52 GMT   |   Update On 2020-07-15 08:52 GMT
தஞ்சை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளராக நாகத்தி ஜி.கலியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளராக நாகத்தி ஜி.கலியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அவை தலைவராக ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளராக லட்சுமணன், ஒன்றிய துணை செயலாளர்களாக கண்ணதாசன், சகிலா புலிதேவன், ஒன்றிய இணை செயலாளராக கவிதா அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகளாக சந்திரசேகரன், ராமலிங்கம், கிருஷ்ணவேணி மனோகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நியமனம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், இதற்கு பரிந்துரை செய்த தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி.க்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News