செய்திகள்
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கடற்படை கப்பல் - கோப்புப்படம்

ஈரானில் சிக்கி தவித்த 687 தமிழர்கள் கடற்படை கப்பலில் தூத்துக்குடி வந்தனர்

Published On 2020-07-01 07:37 GMT   |   Update On 2020-07-01 07:37 GMT
ஈரானில் சிக்கி தவித்த 687 தமிழர்கள் மீட்கப்பட்டு கடற்படை கப்பலில் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
தூத்துக்குடி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் ‘ஆபரேசன் சமுத்திர சேது‘ திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வாறு இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் கடந்த 2-ந் தேதியும், மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் கடந்த 7-ந் தேதியும்,  மாலத்தீவில் சிக்கியிருந்த மேலும் 198 இந்தியர்கள் 24ம் தேதியும்,  இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதைபோல், சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரானில் சிக்கி தவித்தவர்களை அழைத்து வர ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கடற்படை கப்பல் ஈரான் விரைந்தது. அங்கிருந்து 687 பேரை அழைத்து கொண்டு, ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கப்பல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

கப்பலில் இருந்து இறங்கியவுடன் அனைவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் பஸ்களில் பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுங்க மற்றும் குடியுரிமை சோதனை முடிந்ததும் அரசு பஸ்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News