செய்திகள்
மோசடி

சுய உதவிக்குழுவினருக்கு கடன் வாங்கி தருவதாக மோசடி

Published On 2020-06-27 15:35 GMT   |   Update On 2020-06-27 15:35 GMT
சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி, தனியார் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மோசடி செய்துள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, கொடைக்கானல், சிறுமலை, வத்தலக்குண்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுயஉதவிக்குழு பெண்கள் திரண்டு வந்தனர். பின்னர், வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி, தனியார் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் தங்களை மோசடி செய்துவிட்டதாக கூறி தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தனியார் அறக்கட்டளையை சேர்ந்த சிலர் எங்களுடைய ஊர்களுக்கு நேரில் வந்து பேசினர். அப்போது 15 பேர் சேர்ந்து சுயஉதவிக்குழுக்கள் அமைத்தால், ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.1 லட்சம் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறினர். அதை உண்மை என நம்பி தனித்தனியாக சுயஉதவிக்குழுக்களை அமைத்தோம். இதற்கிடையே வங்கி கடன் வாங்கி தருவதற்கு ரூ.6 ஆயிரத்து 100 முன்பணமாக தரவேண்டும் என்று கேட்டனர். இதனால் நாங்களும் அந்த பணத்தை கொடுத்தோம். அந்த வகையில் 60-க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுக்களிடம் பணம் வசூலித்து உள்ளதாக தெரிகிறது. ஆனால், பேசியபடி வங்கி கடன் வாங்கி தரவில்லை. இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகளிடம் கேட்டாலும் உரிய பதில் கூறுவது இல்லை. கொரோனாவால் வேலையில்லாத நேரத்தில் பணத்தை இழந்து தவிக்கிறோம். எனவே, போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News