செய்திகள்
தேங்கி நின்ற மழை நீர்

க.பரமத்தி பகுதியில் பலத்த மழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

Published On 2020-06-02 09:26 GMT   |   Update On 2020-06-02 09:26 GMT
கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
க.பரமத்தி:

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், க.பரமத்தி, குப்பம், தென்னிலை, அஞ்சூர், சின்னதாராபுரம், எலவனூர், ராஜபுரம், தும்பிவாடி உள்பட 30 ஊராட்சிகளில் கடந்த சில நாட்களாக 105 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென க.பரமத்தி, முன்னூர், நெடுங்கூர், காருடையாம்பாளையம், விஸ்வநாதபுரி ஊராட்சிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் க.பரமத்தி குளம் நகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

க.பரமத்தி கடைவீதியில் உள்ள வணிக வளாகத்திற்கு முன்பும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பூமி குளிர்ந்தது.

Tags:    

Similar News