செய்திகள்
பறவைகள் சரணாலயம் - கோப்புப்படம்

காரான் ஊராட்சியில் பறவைகள் சரணாலயம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-05-26 13:48 GMT   |   Update On 2020-05-26 13:59 GMT
காரான் ஊராட்சியில் பறவைகள் சரணாலயம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் காரான் ஊராட்சியில் நீர்நிலை பகுதி உள்ளது. இதில் உள்ள மரங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இதனால் இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து சென்னை ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முத்து மீனா, ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், இணை செயற்பொறியாளர் ஜெயராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள் ஆகியோர் காரான் ஊராட்சியில் பறவைகள் சரணாலயம் அமைப்பது தொடர்பாக இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி தலைவர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் சரசுவதி சக்திவேல் மற்றும் ஊராட்சி செயலர், கிராம முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். 
Tags:    

Similar News