செய்திகள்
கைது

திருமங்கலம் அருகே இரு தரப்பினர் மோதல் : சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

Published On 2020-05-26 09:51 GMT   |   Update On 2020-05-26 09:51 GMT
திருமங்கலம் அருகே இரு தரப்பினர் இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மகனை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் வாசிமலை. இவர் பணி முடிந்ததும், காங்கேயநத்தம் பகுதியில் உள்ள வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது வழியில் உறவினர் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் வாசிமலை பேசியபோது, வாகனத்தை சாலையில் நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த அஜித், அருண் ஆகியோர் நடுவழியில் வாகனம் நிற்பதாக கூறி தகராறில் ஈடுபட்டார்களாம்.

இந்த சம்பவத்தில் 2 பேரும் தன்னை தாக்கியதாக சிந்துபட்டி போலீசில் வாசிமலை புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அருண் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில் சப்- இன்ஸ்பெக்டர் வாசிமலை உறவினர்களுடன் வந்த போது, மந்தை பகுதியில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வாசிமலையின் உறவினர் தனசேகரன் என்பவர் போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அருணாசலம் (வயது 23), காக்கா பாண்டி, செல்லப் பாண்டி, குமரேசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் அருணாசலம் கைது செய்யப்பட்டார்.

இதேபோல் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில் சப்-இனஸ்பெக்டர் வாசிமலை, அவரது மனைவி பாண்டியம்மாள், மகன் ஸ்ரீதர், உறவினர் தனசேகரன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News