செய்திகள்
கோப்பு படம்

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2020-05-25 12:10 GMT   |   Update On 2020-05-25 12:10 GMT
கும்பகோணத்தில் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்:

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் வக்கீல் துர்காதேவி தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மணிகண்டன், கோபி, லெனின், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிக்கன நடவடிக்கை என்று சொல்லி அனைத்து அரசுத்துறைகளிலும் புதிய பதவிகளை உருவாக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்.

இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 58-லிருந்து 59 ஆக உயர்த்திய அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும்,

கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பு 2 வாரம் சிறப்பு வகுப்புகள் நடத்திய பின்னர் தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்திட வேண்டும். டாஸ்மார்க் மதுபான கடைகளை உடனே மூடவேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணமாக வழங்க வேண்டும்.

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல குடிநீர், உணவு வழங்கி, கட்டணமின்றி, ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News