செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்களுக்கு திடீர் கட்டுப்பாடு

Published On 2020-05-23 10:49 GMT   |   Update On 2020-05-23 10:49 GMT
திண்டுக்கல் நகரில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமையில் தொழில் வர்த்தகர் சங்க தலைவர், நிர்வாகிகள், வர்த்தகர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் நகரில் அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வாகனங்கள் மற்றும் டூவீலர்களை கடை முன்பு நிறுத்தக்கூடாது. புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானம், நேருஜி பள்ளி, டட்லி பள்ளி, காந்திஜி பள்ளி, தொந்தியாபிள்ளை சந்தில் உள்ள நகராட்சிப்பள்ளி ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

கடைக்கு வருபவர்களும் பொருட்களை வாங்க வருபவர்களும் தங்கள் வாகனங்களை கடை முன்பு நிறுத்தாமல் மேல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அறிவித்துள்ள சமூக விலகல் மற்றும் முக கவசம் அணிதல் ஆகியவற்றையும் பின்பற்றுமாறு வர்த்தகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பெரிய கடை வீதி, மெயின் ரோடு, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, மவுன்ஸ்புரம், பழனிரோடு ஆகிய பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை 4 சக்கர வாகனங்கள் ஏற்ற மற்றும் இறக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாரஸ் மற்றும் கனரக வாகனங்கள், லாரிகளில் பொருட்கள் ஏற்றி இறக்க மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News