செய்திகள்
மரணம்

போடி அருகே காட்டெருமை தாக்கி எஸ்டேட் ஊழியர் பலி

Published On 2020-05-20 08:39 GMT   |   Update On 2020-05-20 08:39 GMT
போடி அருகே காட்டெருமை தாக்கி எஸ்டேட் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:

நெல்லையை சேர்ந்தவர் லட்சுமணன்(50). இவர் கொழுக்குமலையில் உள்ள எஸ்டேட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பரான சேகருடன் போடிக்கு வனப்பகுதி வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது காட்டெருமை அவர்களை தாக்கியது. இதில் லட்சுமணன் குடல்சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சேகர் படுகாயங்களுடன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரளாவில் இருந்து ஏராளமானோர் வனப்பகுதி வழியே தமிழக எல்லையில் வருவது அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டம், சாக்கலூத்து மெட்டு வழியாக நடந்தே தேவாரம் வந்த கூலித் தொழிலாளர்கள் போலீசாரால் இரவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் இத்ரிஸ்கான் இரவு ரோந்துப் பணியின் போது சிலர் நடந்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்படி கிராம நிர்வாக அலுவலர் பிஜி முருகன் ஆகியோர் இரவில் நடந்து வருவதை தெரிந்து அவர்களை மறித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரளாவில் கோட்டயத்தில் சென்ட்ரிங் வேலைக்குச் சென்றதாகவும் சொந்த ஊருக்குச் செல்ல நடந்தே வந்ததாகத் தெரிவித்துள்ளனர். பெண்கள் உட்பட 13 பேரையும் தேவாரம் தேவேந்திரகுல திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

Tags:    

Similar News