செய்திகள்
ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - கோப்புப்படம்

திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2020-05-18 09:43 GMT   |   Update On 2020-05-18 09:43 GMT
திருப்பூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
திருப்பூர்:

திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் உள்ளது கொடி கம்பம் என்ற பகுதி. இங்கு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். உள்ளது. இங்கு காவலாளி இல்லை.

ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் இந்த ஏ.டி.எம். சென்டருக்குள் புகுந்து கொள்ளை கும்பல் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை மூடினர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் பகுதி மற்றும் அடிப்பகுதியை உடைத்தனர். எவ்வளவே முயன்றும் பணம் இருக்கும் டிஸ்கை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீஸ் மற்றும் வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகள் மூலம் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News