செய்திகள்
முக கவசம்

திருமழிசை மார்க்கெட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

Published On 2020-05-15 12:04 GMT   |   Update On 2020-05-15 12:04 GMT
திருமழிசை மார்க்கெட்டில் இனிவரும் காலங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:

திருமழிசை துணைக்கோள் நகரத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது-

திருமழிசை சந்தைக்கு வரும் வாகனங்கள் பொருட்களை இறக்கியவுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இதேபோல் கடை உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை தவிர்த்து, பிற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதைகளில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்தால் கடைகள் பறிமுதல் செய்யப்படும்.

சமூகஇடைவெளியை முழுமையாக கடைபிடிக்காத உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முக கவசம் அணியாமல் வந்த, 62 பேரிடம் இதுவரை ரூ. 6ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News