செய்திகள்
தனிமை சிறைகள் (கோப்புப்படம்)

கொரோனா பரவுவதை தடுக்க கைதிகளுக்கு 37 தனிமை சிறைகள்

Published On 2020-04-04 06:50 GMT   |   Update On 2020-04-04 06:50 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிதாக கைது செய்யப்படும் கைதிகள் மூலம் சிறைக்குள் கொரோனா பரவிடக் கூடாது என்பதற்காக 37 தனிமைப்படுத்தப்பட்ட சிறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா நோய் பரவாமல் தடுக்க தமிழக சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டிருந்த சுமார் 4 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிதாக கைது செய்யப்படும் கைதிகள் மூலம் சிறைக்குள் கொரோனா பரவிடக் கூடாது என்பதற்காக 37 தனிமைப்படுத்தப்பட்ட சிறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, புதிதாக சிறையில் அடைக்க கொண்டு வரப்படும் கைதிகள், சிறையில் மருத்துவர்களால் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். இருமல், தும்மல், சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் கைதிகளுக்கு இருந்தால், அவர்களை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.


Tags:    

Similar News