செய்திகள்
கோப்புப்படம்

சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர்களுக்கு பாதபூஜை

Published On 2020-04-03 11:25 GMT   |   Update On 2020-04-03 11:25 GMT
சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லக்கூடிய ஊழியர்களை கடவுளாக நினைத்து அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிறுவனத்தின் உரிமையாளரே ஊழியர்களுக்கு பாத பூஜை செய்தார்.
பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தனியார் கியாஸ் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லக்கூடிய ஊழியர்களை கடவுளாக நினைத்து அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிறுவனத்தின் உரிமையாளரே ஊழியர்களின் பாதங்களை மஞ்சள் நீரால் கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு, பூ போட்டு நன்றி செலுத்தினார்.

முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கும், அதை ஏற்றிச்சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், இந்த கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும் எங்கள் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஒருநாள் கூட தாமதமில்லாமல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்து வருகின்ற எங்கள் ஊழியர்களும், எங்களை பொறுத்தவரை கடவுள்தான்.

அதனால்தான் அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களது பாதங்களுக்கு பூஜை செய்து நாங்கள் வணங்குகின்றோம் என்றார்.

Tags:    

Similar News