செய்திகள்
கோப்பு படம்

பேராவூரணி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்ற முன்னாள் கவுன்சிலருக்கு வலைவீச்சு

Published On 2020-03-26 09:26 GMT   |   Update On 2020-03-26 09:26 GMT
பேராவூரணி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்ற முன்னாள் கவுனசிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருப்பூரணிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி ராஜகுமாரி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.

இவர் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 3 மதுபான கடைகள் ஒரே இடத்தில் உள்ளது. அதில் ஒரு மதுபானக் கடையில் செயல்படும் பார் உரிமையாளர் ஆவார்.

மாநில அரசு 24-ந்தேதி மாலை 6 மணி முதல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு மதுபானக் கடைக்கும் அமல்படுத்தப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் ராஜ குமாரி மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பேராவூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்று காலை ராஜகுமாரி வீட்டிற்கு பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர்கள் அருள்குமார், திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சென்றனர்.

விற்பனைக்காக வைத்திருந்த 200 மதுபாட்டில்களை கைப்பற்றினர். தப்பி ஓடிய ராஜகுமாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News