செய்திகள்
செல்போன் பறிப்பு

மெட்ரோ ரெயில் ஊழியர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு

Published On 2020-03-20 06:40 GMT   |   Update On 2020-03-20 06:40 GMT
மெட்ரோ ரெயில் ஊழியர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

பெருங்களத்தூர், புத்தர் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரமணா. கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இரவு பணி முடிந்து அதிகாலை 6 மணி அளவில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு செல்பேனில் பேசியபடி பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரமணாவை வழி மறித்து அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

கொடுங்கையூரை சேர்ந்தவர் வினோத்குமார். உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அவர் கொளத்தூர் வடக்கு மாதா தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் சைக்கிளில் வந்தவர் மீது லேசாக மோதி உள்ளார்.

அப்போது அங்கிருந்த 4 பேர் வினோத்குமாரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் போரூரில் தங்கி வடபழனி வணிக வளாகத்தில் உள்ள துணிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இன்று அதிகாலை அவர் பணி முடிந்து செல்போனில் பேசியபடி சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆழ்வார்திருநகர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் சீனிவாசனின் செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

Tags:    

Similar News