செய்திகள்
மரணம்

வெள்ளகோவில் அருகே கால்நடை ஆஸ்பத்திரியில் டாக்டர் மர்மமரணம்

Published On 2020-02-25 07:23 GMT   |   Update On 2020-02-25 07:23 GMT
வெள்ளகோவில் அருகே கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபதி (வயது 41). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை மருத்துவராக இருந்தார்.

இவரது மனைவி ரேவதி (38) இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர் கேட் என்ற இடத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். டாக்டர் ரேவதி மகள்களுடன் நாமக்கல் மாவட்டத்திலேயே வசித்து வருகிறார். தனபதி அவ்வப்போது வீட்டிற்கு சென்று வருவார்.

நேற்று காலை தாசவநாயக்கன்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயி தனது மாட்டுக்கு மருந்து வாங்க வந்தார். அப்போது மருத்தகம் திறந்த நிலையில் ஃபேன் ஓடி கொண்டிருந்தது. இதைப்பார்த்த விவசாயி மாட்டுக்கு ஊசி போடும் பகுதிக்கு சென்றார்.

அங்கு டாக்டர் தனபதி இறந்த நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டாக்டரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாக்டர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News