செய்திகள்
கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மாதத்தில் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2020-02-22 11:54 GMT   |   Update On 2020-02-22 11:54 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை:

தண்டராம்பட்டு சந்தோஷ்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவருமான தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்றுக் கொண்டிருந்தவருமான லட்சுமணன் மகன் ராஜா (வயது 24) என்பவரை தானிப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வந்தவாசி வெண்குன்றம் கிராமம் முகமது அலி மகன் முகமது இஸ்மாயில் (57) என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக வந்தவாசி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் புரோக்கரை கொலை செய்த பெரிய காஞ்சிபுரம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சிவகுமார் (28) என்பவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல் பிரச்சினையில் முன் விரோதம் காரணமாக கொலை செய்த ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜித்குமார் (21) என்பவரை ஆரணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பரிந்துரையின் பேரில் கலெக்டர் கந்தசாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News