செய்திகள்
கோப்புப்படம்

தோட்டத்தில் பீர் குடித்து லூட்டி அடித்த 5 மாணவிகளை நீக்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை

Published On 2020-02-22 05:23 GMT   |   Update On 2020-02-22 05:23 GMT
அரியலூர் மாவட்டத்தில் தோட்டத்தில் பீர் குடித்து லூட்டி அடித்த 5 மாணவிகளை நீக்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருச்சி:

அரியலூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவிகள் 5 பேர் பள்ளி சீருடையில் அங்குள்ள ஒரு தோட்டத்தில் அமர்ந்து பீர் குடிக்கும் காட்சி வாட்ஸ்அப்-பேஸ்புக்குகளில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே தஞ்சையில் இது போன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் 5 பேர் மது குடித்த சம்பவம் வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவ, மாணவிகள் 5 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அரியலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பீர் குடிக்கும் சர்ச்சையில் சிக்கியது கல்வி துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் பேசினர். மாணவிகளுக்கு பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டது. மேலும் அவர்களை பள்ளியைவிட்டு நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிளஸ்-2 இறுதி ஆண்டு தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதனால் மாணவிகளின் நலன் கருதி தேர்வு எழுத மட்டும் அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விளையாட்டாக செய்த காரியத்தை மாணவிகளின் தோழர்கள் படம் எடுத்து அதை செல்போனில் பரப்பியது அவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி விட்டது.

இதற்கிடையே இதே போன்று புதியதாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பரவி வருகிறது. அதில் நீள கலர் சுடிதார், பேண்ட், வெள்ளை நிற மேல்சட்டை துப்பட்டாவுடன் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் உதட்டோடு உதடு வைத்து நீண்ட நேரம் முத்தமிடும் காட்சியும், அதை மற்றொரு மாணவி செல்போனில் படம் பிடித்து கொண்டே கெட்ட வார்த்தைகள் பேசும்படி அந்த மாணவனை தூண்டுவதும், அந்த மாணவன் முகத்தை கையால் மூடிக்கொண்டே அதை பேசுவதும் அந்த காட்சியில் உள்ளது.

திருச்சியில் இந்த காட்சி பேஸ்புக் கணக்கில் பரவிவருகிறது. இவர்கள் எந்த பள்ளி மாணவ,மாணவிகள் என்பது தெரியவில்லை. இதுவும் தோட்டத்தில் வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவ, மாணவிகள் பேசும் மொழி திருச்சி வட்டார மொழியை ஞாபகபடுத்துகிறது. எனவே இது திருச்சி அல்லது அரியலூர் பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News