செய்திகள்
விபத்து

வத்தலக்குண்டு அருகே அரசு பஸ்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்

Published On 2020-02-21 09:38 GMT   |   Update On 2020-02-21 09:38 GMT
வத்தலக்குண்டு அருகே அரசு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:

திருப்பூரில் இருந்து கம்பம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்தார். அதே சமயத்தில் கம்பத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் சென்றது. இந்த பஸ்சை வெங்கடேசன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

நேற்று இரவு 10 மணியளவில் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையம் அருகே பஸ் வந்து கொண்டு இருந்த போது சாலையின் குறுக்கே மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்து வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக 2 பஸ் டிரைவர்களும் திருப்பினர்.

இதில் எதிர்பாராத விதமாக பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் டிரைவர்கள் வெங்கடேசன், சீனிவாசன், பஸ்சில் பயணித்த பெரியகுளத்தைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வத்தலக்குண்டு நகரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள் அதிக அளவு சுற்றி வருகின்றனர். அவர்கள் சாலையின் குறுக்கே முறையற்று நடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களும் வணிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News