செய்திகள்
திருட்டு நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தபோது எடுத்தபடம்.

நாமக்கல் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

Published On 2020-02-18 18:11 GMT   |   Update On 2020-02-18 18:11 GMT
நாமக்கல் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கோழி மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (38). இவர் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

ராஜா பணி நிமித்தமாக வெளியில் சென்று விட்டார். சங்கீதா வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் ஓட்டை பிரித்து பின்புற அறை வழியாக வீட்டிற்குள் இறங்கி, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். மதியம் 1 மணி அளவில் வீடு திரும்பிய ராஜா, அவரது மனைவி சங்கீதா ஆகியோர் நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சங்கீதா நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News