செய்திகள்
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் (கோப்பு படம்)

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி - அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்

Published On 2020-02-17 14:58 GMT   |   Update On 2020-02-17 15:45 GMT
தமிழகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுமதி அளித்த மாநில அரசுக்கு அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னையில் தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

இதிலும், தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தூத்துக்குடியில்  ரூ.49,000 கோடி முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குவைத் நாட்டில் செயல்பட்டுவரும் அல் க்யுப்லா அல் வட்யா என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் முதலீடு செய்யவும் அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கு அல் க்யுப்லா அல் வட்யா நிறுவனத்தலைவர் அப்துல் கரீம் அல் முட்டாவா மற்றும் சக்தி குழுவின் ராஜ் குமார் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். 

இந்த தொழிற்சாலை மூலம் தென் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News