செய்திகள்
மதுரை மத்திய சிறை

மதுரை மத்திய சிறையில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

Published On 2020-01-28 10:14 GMT   |   Update On 2020-01-28 10:14 GMT
மதுரை மத்திய சிறையில் இன்று சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆய்வு மேற்கொண்டார். அவர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடம் விசாரணை நடத்தினார்.
மதுரை:

மதுரை மத்திய சிறையில் 1,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நல்வாழ்வுக்காக அரசு மற்றும் போலீசார் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இன்று சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆய்வு மேற்கொண்டார். அவர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடம் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து குறைகளை கேட்டறிந்த அவர், கைதிகளின் நன்னடத்தை கோப்புகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு சிறைத்துறை டாக்டர்களிடம் இறப்பு விகித தடுப்பு, மருத்துவ சிகிச்சை மேம்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இன்று மாலை சிறையில் நடக்கும் காவலர் அணி வகுப்பை டி.ஐ.ஜி. பழனி பார்வையிடுகிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 12 காவலர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார்.

முன்னதாக சிறையில் ஆய்வு நடந்தபோது, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா, சிறை அதிகாரி இளங்கோ அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News