செய்திகள்
கோப்பு படம்

குடியரசு தின விடுமுறை நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 66 பேர் கைது

Published On 2020-01-27 11:07 GMT   |   Update On 2020-01-27 11:07 GMT
கோவை அருகே குடியரசு தின விடுமுறை நாளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 66 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

குடியரசு தின விழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை மீறி கோவை மாவட்டம் பேரூர், ஆழியாறு, கோட்டூர், வால்பாறை, சூலூர், பொள்ளாச்சி, கோமங்கலம், நெகமம், மதுக்கரை தொண்டாமுத்தூர், வடவள்ளி, சிறுமுகை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 37 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 322 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போல கோவை மாநகர பகுதிகளான காட்டூர், ராமநாதபுரம், சாய்பாபா காலனி, செல்வபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், குனியமுத்தூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 29 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 272 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News