செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி

Published On 2020-01-22 08:44 GMT   |   Update On 2020-01-22 08:44 GMT
அதிக அளவு விளைச்சல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரி தெரிவித்தார்.
போரூர்:

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

வழக்கமாக 300 முதல் 330 லாரிகள் வரை காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை அதிகளவில் பெய்த காரணத்தினால் விவசாயிகள் வழக்கத்தை விட அதிகளவில் காய்கறிகள் பயிரிட்டனர்.

இதையடுத்து விளைச்சல் அதிகம் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது 380 லாரிகள் வரை காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

இதன் காரணமாக காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 17-க்கும், கத்தரிக்காய் ரூ. 15-க்கும் விற்கப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விலை விபரம் வருமாறு:-

மகாராஷ்டிரா வெங்காயம் ரூ. 30 முதல் ரூ. 50 வரை எகிப்து வெங்காயம் ரூ. 20 முதல் ரூ. 30 வரை, தக்காளி ரூ. 17, பெங்களூர் தக்காளி ரூ. 23, உருளைக்கிழங்கு ரூ. 27, சின்ன வெங்காயம் ரூ. 90 முதல் ரூ. 120 வரை, வரி கத்தரிக்காய் ரூ. 15, உஜாலா கத்தரிக்காய் ரூ. 25, பாகற்காய் ரூ. 25, சுரக்காய் ரூ. 10, வெண்டைக்காய் ரூ. 20, கொத்தவரங்காய் ரூ. 25, பீன்ஸ் ரூ. 25.

முள்ளங்கி ரூ. 8, கேரட் ரூ. 35, பீட்ரூட் ரூ. 30, அவரைக்காய் ரூ. 25, கோவக்காய் ரூ. 18, முட்டைகோஸ் ரூ. 10, வெள்ளரிக்காய் ரூ. 8, முருங்கைக்காய் ரூ. 120, நூக்கல் ரூ. 12, சவ்சவ் ரூ. 6, புடலங்காய் ரூ. 12, பச்சை மிளகாய் ரூ. 10, இஞ்சி ரூ. 55, காலிபிளவர் ஒன்று ரூ. 12.

மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறும்போது, ‘அதிக அளவு விளைச்சல் காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் விலை வீழ்ச்சி அடைந்து உள்ள வியாபாரம் சற்று மந்தமாகவே உள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News