செய்திகள்
கோப்பு படம்

ராமநாதபுரத்தில் பலத்த காற்றுடன் மழை - மரங்கள் சாய்ந்தன

Published On 2019-11-23 17:16 GMT   |   Update On 2019-11-23 17:16 GMT
ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால் 10-க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் ஊரணிகள் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால் ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பட்டணம் காத்தான் பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த 10க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ரோட்டில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்): கடலாடி 15, வாலிநோக்கம் 19, பள்ள மோர்க்குளம் 15, பரமக்குடி 9.80, மண்டபம் 14, ராமநாதபுரம் 42.50 பாம்பன் 18.20, ராமேசுவரம் 25.20, தங்கச்சிமடம் 16.50,, தீர்த்தாண்டதானம் 2, ஆர்.எஸ்.மங்கலம் 4 தொண்டி 10.30 மி.மீ. மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News