செய்திகள்
தலைமைச் செயலாளர் கே.சண்முகம்

5 புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர் நியமனம் - தலைமைச் செயலாளர் உத்தரவு

Published On 2019-11-15 22:29 GMT   |   Update On 2019-11-15 22:29 GMT
5 புதிய மாவட்டங்களுக்கு தற்காலிக கலெக்டர்களை நியமித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய அந்த மாவட்டங்களை உருவாக்கும்போது சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டு இருந்தது.

தற்போது சிறப்பு அதிகாரிகளையே அந்த புதிய மாவட்டங்களுக்கு தற்காலிக கலெக்டர்களாக நியமித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கிரன் குராலா, தென்காசி மாவட்டத்துக்கு ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜான் லூயிஸ், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு எம்.பி.சிவனருள், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு எஸ்.திவ்யதர்ஷினி ஆகியோர் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிக்கை 3 தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுவிட்டது. அந்த வகையில், 5 மாவட்டங்களும் உருவாக்கப்பட்டு விட்டன.

புதிய மாவட்டங்களை இரண்டொரு தினங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கிறார்.
Tags:    

Similar News