search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மாவட்டம்"

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை.
    • தமிழகத்தின் பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து திருவோணம் என்ற புதிய வட்டத்தை தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது. நிர்வாக வசதிக்காக இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டமும், கடலூர் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலம் மாவட்டமும், திண்டுக்கல் மாவட்டத்தைப் பிரித்து பழனி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை.

    தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். புதிய மாவட்டங்களை உருவாக்க அதிக செலவு ஆகாது. ஆனாலும், புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழக அரசை தடுப்பது எது? என்பது தெரியவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோவில்பட்டியை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு திட்டமா?
    • பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    சிவகாசி

    கோவில்பட்டி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் கோவில்பட்டி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது எனவும் அதில் வெம்பக்கோட்டை, சாத்தூர், இணைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால் சாத்தூர், வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சிவகாசி பட்டாசு என்ற அடையாளம் என்பது அழிந்து விடுமோ என கவலை அடைந்துள் ளனர். அவ்வாறு கோவில்பட்டி மாவட்டத்தில் இணைக்கப்பட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் கோவில்பட்டி மாவட்டம் முழுமையாக அறிவிப்பு வரும் முன்னர் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர். தாயில்பட்டி, வெற்றிலை யூரணி, சுப்பிர மணியபுரம், ஆகிய பகுதியை சேர்ந்த வர்கள் வெம்பக்கோட்டை தாலுகா வில் இல்லை. ஆனால் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ளனர். சிவகாசி தாலுகாவில் உள்ளனர். சாத்தூர், வெம்பக் கோட்டை ஆகிய பகுதிகள் புதிதாக அறிவிக்கப்படும் கோவில்பட்டி மாவட் டத்துடன் இணைக் கப்படும் என்ற வதந்தி அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

    • அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
    • 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செய்யாறு வட்ட கிளையின் பேரவை கூட்டம் வட்டக்கிளை தலைவர் எல்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

    பேரவைக் கூட்டத்தினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் வரவேற்றார்.

    இறுதியாக மாவட்ட செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

    கூட்டத்தில் செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரியும், சார் நிலை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே கட்டிக் கொடுக்கும் வகையில் இடம் ஒதுக்கீடு செய்யக் கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பேரவையில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • கவுன்சிலர்கள் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நேற்று பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இக்கூட்டத்தில் தலைவர் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை 2-ஆக பிரித்து பட்டு நகரமான ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுப்பது கண்ணமங்கலம் பகுதியில் மனைப்பிரவில், பேரூராட்சிக்கு திறந்த வெளிபூங்கா, சாலை வசதி அமைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×