ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்

கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் கவுன்சிலர்கள் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்
கண்ணமங்கலம் பேரூராட்சியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்ற காட்சி.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்ற காட்சி.
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நேற்று பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இக்கூட்டத்தில் தலைவர் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை 2-ஆக பிரித்து பட்டு நகரமான ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுப்பது கண்ணமங்கலம் பகுதியில் மனைப்பிரவில், பேரூராட்சிக்கு திறந்த வெளிபூங்கா, சாலை வசதி அமைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com