செய்திகள்
பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.

பொதுமக்களுக்கு நோய் தடுப்பு-சத்து மாத்திரைகள்

Published On 2019-11-07 18:20 GMT   |   Update On 2019-11-07 18:20 GMT
திருமருகலில் உள்ள 16 துணை சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
திருமருகல்:

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அரசு அதிகாரிகளால் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமருகல் வட்டாரத்தில் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. திருமருகல் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராம பகுதிகளில் வட்டார மருத்துவ அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை பணிகளை செய்து வருகின் றனர் .

திருமருகல் வட்டார அளவில் திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, கணபதிபுரம், திருப்பயத்தங்குடி, திட்டச்சேரி ஆகிய 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் 16 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த துணை சுகாதார நிலையங்களில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. திருமருகல் ஒன்றியம் கீழப்போலகம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியர் எலிசபத் அப்பகுதி மக்களுக்கு மாத்திரைகளையும், கர்ப்பிணிகளுக்கு சத்து மாத்திரைகளையும் வழங்கினார். 
Tags:    

Similar News