செய்திகள்
அபராதம்

டெங்கு கொசு: சினிமா படம் பிடிக்கும் பங்களா- தொழிற்சாலைக்கு ரூ.1½ லட்சம் அபராதம்

Published On 2019-11-04 09:01 GMT   |   Update On 2019-11-04 09:01 GMT
பூந்தமல்லியில் டெங்கு புழுக்கள் கண்டறியப்பட்ட சினிமா படம் பிடிக்கும் பங்களா மற்றும் தொழிற்சாலைக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பூந்தமல்லி:

பூந்தமல்லி ஒன்றியம் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு டெங்கு கொசு ஒழிப்பு பணியை மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.டி.கவுதமன், ஊராட்சி செயலர் வினாயகம் உள்பட 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மருத்துவ குழுவினர் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மாறன் நகரில் உள்ள சினிமா படபிடிப்பு வாடகை பங்களாவில் டெங்கு புழுக்கள் கண்டறிப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கோபுரசநல்லூரில் லாரி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சமும், ராயல் கார்டன் பகுதியில் உள்ள 3 வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என மொத்தமாக ரூ.1.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அதிகாரிகள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News