செய்திகள்
கோப்பு படம்

மோட்டார்சைக்கிளில் 2 பேருக்கு மேல் சென்றால் நடவடிக்கை - போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

Published On 2019-11-02 10:06 GMT   |   Update On 2019-11-02 10:06 GMT
மோட்டார்சைக்கிளில் 2 பேருக்கு மேல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வில்லியனூர் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
வில்லியனூர்:

வில்லியனூர்- விழுப்புரம் பைபாஸ் சாலையில் தினந்தோறும் சிறுசிறு மோட்டார் சைக்கிள் விபத்துகள் நடக்கிறது. இதற்கு காரணம் ஒரே மோட்டார் சைக்கிளில் 3-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து அதிவேகமாக செல்வதால் இந்த விபத்துகள் நிகழ்கின்றன.

இவர்கள் விபத்தில் சிக்குவது மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அச்சுறுத்துவதோடு அவர்களையும் விபத்தில் சிக்க வைக்கிறார்கள். அதோடு இவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரிழப்பையும் சந்திக்கிறார்கள்.

இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வாலிபர்கள் இதனை கடைபிடிப்பது இல்லை.

இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கூறியதாவது:-

போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இரு சக்கரவாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து சென்றால் அவர்களின் உயிருக்கும் பாதுகாப்பு ஆகும்.

அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் வாயிலாக தற்போது வில்லியனூர் பகுதியில் இருசக்கர வாகன விபத்துகள் குறைந்துள்ளது.

இனிமேல் மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News