செய்திகள்
திருட்டு

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு

Published On 2019-10-21 08:45 GMT   |   Update On 2019-10-21 08:45 GMT
பட்டீஸ்வரம் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனு புரீஸ்வரர் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவில் பூஜையை முடித்துக்கொண்டு கணேஷ் குருக்கள் வீட்டுக்கு புறப்பட்டார்.

கோவிலின் சின்ன கிணத்துமேடு அருகில் ராமர் திருத்தம் என்ற இடத்தில் பக்தர்கள் வாரம்தோறும் ஆஞ்சநேயர் சிலைக்கு விளக்கு போடுவது வழக்கம்.

இந்த சிலை பிரகாரம் பக்கத்தில் ஒரு அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கல் சிலை இருந்தது

இந்த நிலையில் ஆஞ்சநேயர் சிலையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணேஷ் ஐயர் கோவில் நிர்வாகத்திடம் கூறினார் இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசில் புலவர் செல்வசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஆஞ்சநேயர் சிலையை பெயர்த்து எடுத்தது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ஆஞ்சநேயர் சிலையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பட்டீஸ்வரம் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News